
செழுமைகள் கூத்தாடும்
செங்கமலத் தீவு
எழுகின்ற மழைபோல
எல்லாமும் வனப்பு
விழிமுற்றும் ஈர்ப்பது
விரிபட்டுச் சேலையோ
ஒளிநெற்றிப் புருவத்தின்
சங்கமச் சோலையோ
கரைமுட்டும் அலையாக
கண்ணுக்குள் மாங்கிளி
தரைதொட்ட முந்தானை
தளிர்விட்ட பூங்கொடி
விரல்பூட்டிக் கால்கட்டி
வீற்றிருக்கும் தீபமே
நிறைவான சுகம்பெற்று
நீடூழி வாழ்கவே
அன்புடன் புகாரி
1 comment:
நல்ல கவிதை
வாழ்த்துக்கள்
ராமகிருஷணன்
Post a Comment